என்னைப் பற்றி

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Saturday, August 9, 2008

டைனமிக் திருமணம்



அன்புத் தமிழ்நண்பர்களே,
யாரையும் சுட்டி எழுதாமல், இந்தத் தலைப்பை ஒட்டியும், இதையொட்டி முன்னிறுத்தப் பட்டக் கருத்துக்களோடு எனது கருத்தையும் துலாவில் வைக்கிறேன்.

இதை வாசிக்கும் முன்பு ஒரு முறை அந்த படத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

வாதத்திற்குச் செல்லும் முன் வாதப் பொருளைப் பற்றிய கருத்து இது. "டைனமிக் கல்யாணம் - இதுதான் தமிழன் பண்பாடு" டைனமிக் என்னும் தமிழ் வார்த்தையை, ஏன் குறைந்த பட்சம் சமஸ்கிருத வார்த்தையைக் கூட நான் கேள்விப் பட்டதில்லை, ஆனால் அந்த டைனமிக் தான் தமிழனின் கலாசாரம், பண்பாடு என்கிறார் சிநேகன், கேப்ரியல் மற்றும் சிலர்.

திருமணம், முக்கியமாக தாலி கட்டும் முறை இந்து எனப்படும் மதநெறியில் வருகிறது. ஆக இங்கே தமிழன் பண்பாடு எனும் போது, இது இந்துக்கள் பண்பாடா என்பது கேள்விக் குறியாகிறது. இந்து என்பவன் யார், தமிழன் என்பவன் யார் என்பது வேறு பேச்சாக போகட்டும். இப்பொழுது இந்துக்கள் தமிழனில் உள்ளான் என்றும், தமிழன் இந்து என்றும் வைத்து வாதாடுவோம்.

பொதுவாக திருமணங்கள் ஆதிவாசிகள் நடத்தினாலும், வேறு எந்த மொழிக் காரனோ அல்லது மதக் காரனோ நடத்துகையிலும் திருமணத்திற்காக ஏதாவது ஒன்றை அணிகிறார்கள். தாலி, மோதிரம், மெட்டி, சில வகையான கற்கள், இன்னும் பல. ஏனிந்த அடையாளம் தேவைப் படுகிறது? ஒரு சமூகத்தில் ஒருவர் திருமணமானவரா இல்லையா என்பதை அறிய வேண்டியது அவசியமாகிறது, அதற்கு ஒரு அடையாளம் தேவைப் படுகிறது. ஏன் அவசியப் படுகிறது? ஒரு திருமணமானவரை திருமணமாகாதவர் திருமணம் செய்யும் காதல் எண்ணத்தோடு பார்க்கக் கூடாதென்பதால் அது அத்தியாவசியமாகிறது. மேலும் இதனுடைய பலன் நிறையவே. ஆனால் எங்கே இந்தப் பொருளுக்கு மரியாதை குறைந்துவிடுமோவென்ற பயத்தில் அந்தப் பொருளின் மீது ஏகப்பட்ட சம்பிரதாயங்கள் புகுத்தப் படுகிறது. அதை எப்பொழுதும் கருத்தில் கொள்வதற்காக பூஜை புனஸ்காரங்கள் செய்யப் படுகிறது.

ஏன் அதை எப்பொழுதும் ஞாபகம் வைத்தல் வேண்டும். வெளியுலகத் தொடர்புக்கு வீட்டை விட்டு பிள்ளை பிரிந்து செல்லும்போது, பெரியவர்கள் வீட்டு ஞாபகம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில் கூடா நட்பு, வேண்டா செயல் இவற்றைத் தடுக்க அந்த நினைவு தேவைப் படுகிறது. தான் யார், தனக்கென்று இருக்கும் கடமை மறக்கக் கூடாததற்காக அது சொல்லப் படுகிறது. அது போல மறந்தும் மாற்றாள் கணவரையோ, மாற்றான் மனைவியையோ காமம், காதல் போன்ற எண்ணத்தில் பார்த்து விடக் கூடாது என்றும், மணமானவர் வேறொருவரை அதே நோக்கோடு பார்க்கக் கூடாதென்பதற்காகவும் தான் எப்பொழுதும் கூடவே இருப்பதற்காக அந்தப் பொருள் சூட்டப் படுகிறது. ஆக இதுவே தாலியின் பயன்பாடு. அது போல ஆண்களுக்கு மெட்டி. இது சமீப காலமாக பெண்களுக்கே பூட்டப் படுகிறது, ஆணாதிக்கக் காலத்தில் நட்ந்திருக்கக் கூடும். ஆக தமிழன் பண்பாட்டில் பெண்களுக்குத் தாலியும், ஆண்களுக்கு மெட்டியும் அத்தியாவசியமாகிறது.

விதவைகள் சடங்குகளில் ஒதுக்கப்படுவதென்பது வயக்காட்டின் நெல்லுக்கிடையே முளைத்த புல் போன்றது. அதற்காக நெல்லையும், வயலையுமே தூக்கி எறிந்து விட்டு மாற்று வழி தேடுவது மூடத்தனமாகிறது. புல்லையும் மற்ற தேவையற்றவையையும் களைந்து எறிந்து விட்டு, நெல்லை வீட்டிற்குக் கொண்டு சேர்ப்பதே அறிவு. மற்றவை அறிவீனம். விதவையை ஒதுக்கும் மூடநம்பிக்கையை களைய வேண்டுமே அன்றி, தமிழனின் சம்பிரதாயத்தையே ஒதுக்குதல் அறிவீணம் ஆகிறது.

இப்பொழுது கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் என்னும் பொருளுக்கு வருவோம். இது தவறே அல்ல என்பது போன்ற விவாதம் மிகவும் மேலோட்டமாக நடந்திருக்கிறது. இதைப் பற்றியும் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு முன்னர் வேறு ஒன்றைப் பற்றியும் பேச வேண்டி வருகிறது.

மோதிரம் மாற்றும் பழக்கமுடைய வெளிநாட்டுக் கல்யாண முறையைக் (திருமணமாகதவரும் மோதிரம் அணியலாம் என்பதால் யார் திருமணமானவர் என்பது கண்டுபிடிப்பது அரிது) கொண்டு தமிழகத்திலும், இந்தியாவிலும் வளர்க்கும் எண்ணத்தோடு இருக்கும் கேப்ரியலுக்கும், அவரது சிநேகனாக இருக்கும் சிநேகனுக்கும் வெளிநாட்டுப் பணம் குவிகிறது என்ற எண்ணமே வருகிறது. வெள்ளையன் நாட்டைப் பிடிக்கப் பயன்படுத்திய தந்திரம் இப்பொழுது வேறு பாணியில் இந்தியாவில் குடியேறி இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. பிரித்தாளும் முறையை எப்பொழுதுமே வெள்ளையன் நம்புகிறான், ஏனெனில் பலனும் கிடைக்கிறது. ஒரு சமூகத்தை அடக்கி ஆள வேண்டுமெனில், முதலில் அந்த சமூகத்தின் முதுகெலும்பான பண்பாட்டை, மொழியை உடைப்பது. பொதுவாகவே மொழிக்கும், சடங்கு, சம்பிரதாயம், பண்பாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஆக அச்சமுதாயத்தினரை அவரது மொழியை விட வேறு மொழி சிறந்ததென்றும், தனது கலாசாரத்தை விட வேறு கலாசாரம் சிறந்ததென்றும் நம்ப வைக்க வேண்டியுள்ளது. இதைத்தான் செய்து அன்று வென்றான் வெள்ளையன். இன்று நாகரீகம் என்னும் பேரில், இரவாட்ட விடுதி, அது இது என்று இப்பொழுது டைனமிக் கல்யாணம் வரை ஒன்றொன்றாகப் பழகி வருகிறது இந்தியா. இதை ஊக்குவிக்கப் பயன்படுவது சில, பெண்ணியம் மற்றும் சம உரிமை என்னும் பேரில் நான் ஏற்கனவே சொன்னது போல் களை எடுப்பதற்குப் பதில் வயலையே ஒதுக்குவது போன்ற முறையில்தான் இவ்வளவும் அரங்கேறுகிறது என்பது ஆழ யோசித்தால் விளங்கும். அதே முறையில் இப்பொழுது விதவையை ஒதுக்குதல் மூடத்தனத்தை முன்னிருந்தி, டைனமிக் போன்ற திருமணங்கள் சமுதாயத்தில் எய்ட்ஸ் வைரஸ் போல பரவுகிறது.

கட்டிப் பிடித்தல், முத்தம் இவை பற்றிப் பேசுவோம். வெள்ளையன் யாரைப் பார்த்தாலும் அணைத்துக் கொள்வதும் அன்பாக ஒரு சின்ன முத்தம் கொடுப்பதும் வழக்கம். ஆனால் மிஞ்சிப் போனால் சந்திக்காதவர்கள் பழக்கமில்லாதவர்கள் சந்திக்கும் பொழுது ஒரு நொடி, அல்லது இரு நொடி மட்டுமே அணைப்பார்கள், அதுவும் உடலோடு உடல் அதிகம் ஒன்றாமல். ஆனால் டைனமிக்கில் ஏதோ பத்து வருடம் பழகிய நண்பனை நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பது போன்று ஆரத்தழுவி மூன்றுக்கும் மேற்பட்ட முத்தப் பரிமாற்றம் என்பது காமமின்றி வேறெதுவுமில்லை. ஆனால் அதைப் புரியாமல் செய்கிறார்கள் தமிழக அப்பாவி ஜனங்கள்.

முத்தமும், கட்டிப்பிடித்தலும் சர்வ சாதரணமாகிவிடின் உடலோடு உடல் புணர்வதைத் தவிர திருமணமானவர்களுக்கும் ஆகாதவர்களுக்கும் வித்தியாசமில்லை. ஏன் இன்னும் கொஞ்ச நாள் கழித்து மேடையிலேயே உடலோடு உடல் புணர்ந்தும் கொள்ளலாம் என்று டைனமிக்கினர் சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் அப்பொழுது உதடு, கன்னம் போல ஒரு சதைப் பிண்டம்தான் அண்டமும் என்ற கருத்து முன்வைக்கப் படலாம். இதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்களா? உடலே சதைப் பிண்டம்தான், அங்கனம் சதையும் சதையும் சேரும்போது சதையில் என்ன வித்தியாசம்??? கூசுகிறதா எண்ணம், வாசிக்கும் பொழுது???

கூசவில்லையெனில் இதற்கு மேலும் நீங்கள் வாசிக்க வேண்டாம், நீங்கள் டைனமிக் திருமணத்தை முழுமனதோடு ஆதரிக்கலாம். கூசியதெனில் இதுவே கூற்று, முத்தமும், கட்டிப் பிடித்தலுக்கும் உண்டான வரை முறைகள்.

ஒரு தாய், தனது பிள்ளையை அள்ளி அணைத்து முத்தம் தருவதும், ஒரு அண்ணன் தங்கையை முத்தமிடுவதற்கும் காமம் அறவே அற்ற அன்பு வேண்டும். அந்த உள்மன அன்போடுதான் நமது சமுதாயத்தில் அனைவரும் உள்ளனரா?

மேலும் ஒரு கருத்து முன்வைக்கப் படுகிறது. நான் ஒருவரைக் கட்டிப்பிடிக்க என் மனது சுத்தமாக இருந்தால் போதும், அவரைப் பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும் என்று. இது சற்று சிந்திக்கப் பட வேண்டிய ஒன்று. மலமிருக்கும் இடத்திலும் என்னால் மலம் ஒட்டாத உணவை உண்ண முடியும், ஆனால் மலத்தையும் தட்டிலேயே வைத்துக் கொண்டு உணவை உண்ணலாமென்பது தவறு. மலத்தையும், உணவையும் ஒன்று படுத்திப் பேசுவதற்கு மன்னிக்கவும், உணர்ந்தால் இதற்கும் டைனமிக்கிற்கும் எந்த வேறுபாடுமில்லையென்பது உங்களுக்குப் புரியும். கட்டிப் பிடித்தல் என்பது இருவர் சம்பந்தப் பட்டது, ஒருவர் சம்பந்தப்பட்டதல்ல. இருவரும் தனித்தனியே இருக்கும் வரைதான் உணர்வுகள் வேறு, ஒன்றானால் அங்கே இருவரின் உணர்வும் பார்க்கப் பட வேண்டியுள்ளது. நீங்கள் நீங்களாக மட்டுமே இருந்து பேசலாம், அரட்டை அடிக்கலாம், ஆனால் ஒரு உள்ளம் மட்டுமே தூய அன்போடு இருந்து கொண்டு மறுபுறம் உள்ள காம உள்ளம் கொண்டவரைக் கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதும் ஆகாத காரியம்.

சிறிதும் சம்பந்தமே இல்லாத, ஒருவொருக்கொருவர் சற்றும் பழக்கப்படாத இருவரும் உள்ளன்போடு பார்த்த உடன் இருக்கிக் கட்டிப்பிடித்து முத்தமும் பரிமாறிக் கொள்ளலாம் என்பது உலகம் முழுதும் பூஞ்சோலையாக இருக்கும்போது ஏற்றுக் கொள்வோம், சாக்கடைகளும், புதைகுழிகளும் நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில் தேவையற்றது. யானை வாங்கிவிட்டு துரட்டி வாங்கலாம், துரட்டி வாங்கியதிற்காக யானை வாங்குதல் தவறு.

தமிழனின் பண்பாட்டையும், பழக்க வழக்கத்தையும் டைனமிக் என்னும் ஒன்றுதான் முடிவு செய்யுமாயின், தமிழன் தயாராகலாம் அடுத்த அடிமையுகத்திற்கு!

11 comments:

said...

நல்ல தலைப்பு அண்ணன்.உங்கள் கருத்துகள் அருமை.

said...

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி
என்கிற பாட்டைக் கேட்டிருப்பீர்கள்

கன்னத்தில் முத்தமிட ஒரு கணவனுக்கு மட்டுமே உரிமை அளிக்கப்படுகிறது நம் பண்பாட்டின் படி
ஏனென்றால் கன்னத்தில் முத்தமிட்டால்
உள்ளம்தான் கள் வெரு கொள்ளும் என்கிறார்கள்
கள் வெறி என்னென்னெ விளைவுகளி ஏற்படுத்தும்...
நல்லவனை நிலை தவறச் செய்யும்
ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற வைக்கும்
அப்படிப்பட்ட முத்தம் கணவனைத் தவிற வேரு யாரும் கொடுக்கக்கூடாது
என்னும் பொருளில்தான் அப்படி சொல்லி இருக்கிறார்கள்

பொதுவாக முத்தம் பல வகைப்படும்
தாய் அல்லது, தந்தை தன் குழந்தைகளை ஆசீர்வதிக்கும் எண்ணத்தோடு முத்தமிடும்போது நெற்றியில்தான் முத்தமிடவேண்டும்
நட்பு முறையில் முத்தமிடும்போது
கைகளின் பின் புறம் முத்தம் கொடுக்கலாம், அதுவும் ஆணாக இருந்தால்
பெண்ணாக இருக்கும் போது விலகி
இருத்தலே நலம்

வாயோடு வாய் வைத்து முத்தமிடும்
நடை முறை கணவனோ,அல்லது மனைவியோ காம வசப்படும் போது மட்டுமே அனுமதிக்கப் படுகிறது
நம் பண்பாட்டில்
அப்படி இருக்க தொட்டுப் பேசுதலே தவறு என்னும் நம் பண்பாட்டை
மீறுவது, மிகக் கேவலமான
டைனமிக் திருமணம் போன்றவை
நம்முடைய மரபுகளுக்கு சற்றும் ஒத்துவராத வழக்கங்கள்
என்பது என் கருத்து
முறைப்படி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளே ஒருவரை ஒருவர் புறிந்து கொள்ளாமல் விரைவிலேயே விவாகரத்து புரியும் இக்காலத்தில் இன்னும் நம்முடைய பண்பாட்டை அதிகமான அளவிலே கடைப்பிடிக்க வேண்டும் என்பதே என் கருத்து

அன்புடன்

தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com
peopleofindia.net@gmail.com

said...

@ஒளியவனே,

எது பண்பாடு? எவ்வாறு உங்களாள் கூற முடியும்? தொன்ற்று தொட்டு வருவது பண்பாடுடா?

====

திருமணம், முக்கியமாக தாலி கட்டும் முறை இந்து எனப்படும் மதநெறியில் வருகிறது.

தாலி, மோதிரம், மெட்டி, சில வகையான கற்கள், இன்னும் பல. ஏனிந்த அடையாளம் தேவைப் படுகிறது? ஒரு சமூகத்தில் ஒருவர் திருமணமானவரா இல்லையா என்பதை அறிய வேண்டியது அவசியமாகிறது

====

தாலி, மொட்டி போடுவது எப்போது வந்தது? ஏதாவது / எப்பவாவது உருவாக்கிய ஒன்றைத்தான் நாம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பது. மனிதனுக்கு எது விருப்பமானதோ அதை தேர்ந்து எடுக்கும் உரிமை வேண்டும், டைனமிக் கல்யாணம் நான் ஆதரித்தோ எதிர்த்தோ பேச வில்லை, சில பேருக்கு சந்தோசத்தை தரும் என்றால் இருந்து விட்டு போகட்டுமே. இன்னும் 50,100 வருடத்தில் "டைனமிக் கல்யாணம்" கூட தமிழர் பண்பாடு ஆகிவிடும்.

said...

அன்பு மனமே,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்தில் ஒரு இயலாமையும், பண்பாடு என்று எதுவுமே இல்லையென்னும் தோல்வி நிலையும் கொஞ்சமாகப் புலப்படுகிறது.

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது, ஏனெனில் பண்பாடு என்பது மாறிக்கொண்டே வருவதுதான். ஆனால் தொன்று தொட்டு வருவதும் பண்பாடல்ல என்றால், வேறெப்படியும் நீங்கள் பண்பாட்டை அறியமுடியாது.

நீங்கள் காலையில் எழுந்தவுடன் பல்தேய்க்கும் பழக்கமும், இரவு தூங்குமுன்பு பல்தேய்க்கும் பழக்கமும் இருந்தால் அது நல்ல பண்பாடுதானே, அதை உங்கள் வம்சம் பின்பற்றுவது தவறில்லை.

நாம் நல்லவையும் தீயவையும் ஆய்ந்தறிய கற்றுள்ளோம், ஆயினும் மனித மனம் சில நேரம் கேள்வி கேட்க வேண்டுமென்பதற்காக நன்னெறியிலிருந்து தவறிவிடக் கூடாது அல்லவா அய்யா!

நாம் இறக்கும் முன்பு சமூகத்திற்காக ஒரு மரமேனும் கொடுப்போம், சில நல்ல பழக்கங்கள் விட்டுச் செல்வோம். எழுத்தாணியிலிருந்து பேனா பண்பாடு முன்னேற்றம், சேலையிலிருந்து சுடிதார் பண்பாடு முன்னேற்றம். ஆனால் டைனமிக் என்பது முன்னேற்றமில்லை. இதை நீங்களும் ஒத்துக் கொண்டது ஒன்றே எனக்கு மகிழ்ச்சி. இருப்பினும் பண்பாடு என்பது எதுவுமில்லை என்றுதான் உங்கள் வாதம்.

உண்மை என்னவென்றால் முட்கள் நிறைந்த பாதையில், நல்லவழி அறியுமாறு கால்தடம் பதித்துச் செல்லுதல் பண்பாடு. மரத்தடியில் இரவுத் தூக்கம் கூடாதென்பதும் பண்பாடுதான் அய்யா. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கூறும் நல்வழிகளெல்லாம் சமுதாயத்தின் தோப்பில் வளரும் ஒரு செடியை நன்னெறிப் படுத்தி பண்பாடோடு வளர்க்கிறீர்களென்று அர்த்தம்.

மிக அவசியமான கேள்வியை எழுப்பியமைக்கு நன்றி அய்யா.

Anonymous said...

Good post.
this is type of MLM buisness.if u want get dynamic marage ..u must memper.each menmber required to pay about$500.1 person must find another 4person then u will getback your Money.How?..
This type of company should be banned.this network marketing , MLM all are bullshit. The business's concept is how well you can brainwash others. The more you brainwash the more you get the money. Its like saying "well I have brainwashed you and got the money and do the same to others and get your money back".

-Vishnu/Mathi

said...

அன்பு நண்பரே,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியிருக்கும் கருத்து உண்மையாயிருக்கும் பட்சத்தில் இது தீவிரமாக கவனிக்கப் பட வேண்டியதாகிறது.

said...
This comment has been removed by the author.
said...

முதலில் நான் எழுதுவதில் எழுத்துபிழை இருந்தால் மன்னிக்கவும், சுட்டி காட்டலாம்.

நல்ல ஒரு விவாதத்தை கொண்டு வந்ததர்க்கு ஒளியவனுக்கு ஒரு சபாஷ். இதை முழுமையாக நான் எதிர்கிறேன். இது நாட்டின் பண்பாட்டை குலைக்க வெளிநாட்டவர் பணம் கொடுத்து செய்யும் ஒரு இழிவான செயல்.
ஒளியவனின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.......

said...

நன்றி திரு.காந்தி ராஜ் அவர்களே!

said...

dynamic mariage---- ithuvum oru vahaiyil namathu panpattai paarampariyathai ilivu paduthuthal... nalla pathippu oliyavan sir...

Anonymous said...

மிக‌வும் அதிர்ச்சிய‌ளிப்ப‌தாக‌ இருக்கிற‌து... ந‌ட‌க்கின்ற‌ நிக‌ழ்வுக‌ளைப் பார்த்தாலே இது ஒரு வ‌கையான‌ ம‌ன‌நிலை பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளால் ப‌ர‌ப்ப‌ப் ப‌டுவ‌து போல் இருக்கிற‌து. க‌ண்ட‌ன‌த்திற்குறிய‌ செய‌ல்.