என்னைப் பற்றி

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Sunday, August 10, 2008

சுப்பிரமணியபுரம் - விமர்சனம்





தமிழ்ப் படங்களில் வெகு சில படங்களே தொடும் கதைக்களத்தை எடுத்திருக்கிறது சுப்பிரமணியபுரம். அதற்காக நிச்சயம் இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆன சசிகுமாருக்கு பாராட்டுகள் தெரிவித்தே ஆகவேண்டும். இவர் பாலா, அமீர் ஆகிய இருவருடன் துணை இயக்குனராக பணியாற்றியது நிச்சயம் இவ்விடத்தில் நினைவு கூறப்பட வேண்டியுள்ளது. அவர்கள் இருவரின் சாயல் இவருடைய சுப்பிரமணியபுரம் படம் முழுக்க இருப்பதே அதற்கு சாட்சி.

படம் 80 களில் தொடங்கி நிகழ்காலத்தில் முடியும் திரைக்கதை கொண்டது எனினும், படத்தின் பெரும்பாலான, முக்கிய காட்சிகள் அனைத்துமே 80 களில் மட்டுமே நடக்கிறது. படம் ஒரு 28 வருடம் பின்னோக்கிப் பயணிப்பதால், அதற்குத் தேவையான வேலைப் பாடுகள் எளிதானவை அல்ல. அதற்காக ஒவ்வொரு காட்சியிலும் சிரமப் பட்டிருப்பது அழகாக வெளிவந்திருக்கிறது.

படத்தில் மூன்று நாயகர்கள் ஜெய், சசிகுமார், (கஞ்சா) கருப்பு. கதாநாயகியாக சுவாதி. தெலுங்குப் படத்தில் துணை நடிகையாக தலை காட்டிய சுவாதிக்கு சுப்பிரமணியபுரம் மூலமாக கதாநாயகி இடம் கிடைத்துள்ளது. உண்மையில் சொல்லப் போனால் வெகு சில படங்களில் மட்டுமே கதாநாயகிகள் கதாநாயகியாக வருகிறார்கள், மற்றும் பல படங்களில் ஆடல், பாடல் நாயகிகளாக மட்டுமே வருகின்றனர். அப்படிப் பார்த்தால் இந்தப் படத்தில் சுவாதி கதாநாயகி என்பதில் ஐயமில்லை.

தாடி, மீசை, அந்தக் காலத்து பாவாடை போன்ற கால்சட்டை இவைகளோடு ஜெய் அற்புதமாகப் பொருந்தியுள்ளார். இந்தப் படம் நடித்ததன் மூலம் இனி அவருக்கென வேடங்கள் ஏற்பது கொஞ்சம் சிரமப் படும். அவர் மீதான மக்களின் பார்வை இப்பொழுது ஒரு நல்ல கதையின் நாயகனாக பதிந்துள்ளது குறிப்பிடத் தக்கது. சசிகுமாரும், கருப்பும் அவரவர் பணியை வெகு சிறப்பாக செய்துள்ளனர்.

நண்பர்களென்றாலே கூத்து, கும்மாளம், நகர வாழ்க்கை என்ற எல்லையை மீறி எடுக்கப் பட்ட படங்கள் வெகு குறைவு, அதில் இது ஒன்று. இருப்பினும் இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது பருத்தி வீரன், பட்டியல் போன்ற படங்களை ஞாபகப் படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இதெல்லாம் போக இன்னொரு கதையின் நாயகனாக சமுத்திரக்கனி வருகிறார். இவரும் அவரது பாத்திரத்தை வெகு அழகாக செய்திருக்கிறார். நாயகிக்கு வாயால் பேசும் வசனத்தை விட கண்ணால் பேசும் வசனமே அதிகமாக இருப்பது ஒளித்திரையைக் கையாளும் முறையை வெகு அழகாக எடுத்துச் சொல்கிறது.

ஏற்றி விட்டது: 80 களின் சூழ்நிலைக்காக சிரமப் பட்டிருப்பது, சிறந்த கதை, திரைக்கதை

இறக்கி விட்டது: வழக்கமான கதாநாயகனுக்கே உரிய நீண்ட பெரிய வசனத்தை சசிகுமார் இறுதியில் பேசுவது, காட்டிக் கொடுக்க வந்த கஞ்சா கருப்பு அவ்வளவு நேரம் அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டிருப்பது.

7 comments:

said...

அருமையான விமர்சனம் ... தெளிவாக உள்ளது ... படம் கண்டிப்பாக பாராட்டபட வேண்டிய படம் தான் ... புதிய நல்ல முயற்சிக்கு தமிழ் மக்களிடம் கண்டிப்பாக நல்ல வரவெற்ப்பு உண்டு என்பதற்கு இந்த படம் ஒரு சாட்சி... பாலா, அமிர், ராம் போன்ற இயக்குனர்கள் பட்டியலில் சசிகுமார்க்கு இடம் நிச்சயம்... நன்றி ...

said...

நன்றி சுதா!

said...

எல்லோரும் முக்கி எடுத்து விட்ட ஆதீ விமர்சனம் தான் ஐயா..
இருந்தாலும், விமர்சனம் அருமை...

3வது போனி ஆஜர் ஸார்

said...

நான் இப்பந்தாங்க பார்த்தேன், அதான் அப்படியே நானும் என் பங்குக்கு ஒரு விமர்சனம் எழுதினேன்.

நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு.

said...

nalla

padam!


nallavithamana

vimarsanam!

said...

நன்றி பெய்சுல்!

said...

I don't know why kanjcha karuppu doing that at the end. I couldn't understand.

Is it for the money?